close
Choose your channels

ரஷ்யா செல்லும் முன் திடீரென அமெரிக்காவுக்கு பறந்த கமல்ஹாசன்.. என்ன காரணம்?

Thursday, February 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்ஃலைப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஷ்யா செல்லும் முன் திடீரென கமல்ஹாசன் அமெரிக்கா சென்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்ஃலைப்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக கமல்ஹாசன், மணிரத்னம் உட்பட படக்குழுவினர் விரைவில் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திடீரென கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு கிளம்பி உள்ளதாக தெரிகிறது. ’இந்தியன் 2’ படத்தின் முக்கிய காட்சி ஒன்றின் படப்பிடிப்பு அமெரிக்காவில் படமாக்கப்பட இருப்பதை அடுத்து அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் ரஷ்யாவுக்கு ’தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்போடு தேர்தல் பணிகளையும் அவர் கவனிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment