ரஷ்யா செல்லும் முன் திடீரென அமெரிக்காவுக்கு பறந்த கமல்ஹாசன்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,February 01 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்ஃலைப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஷ்யா செல்லும் முன் திடீரென கமல்ஹாசன் அமெரிக்கா சென்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்ஃலைப்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக கமல்ஹாசன், மணிரத்னம் உட்பட படக்குழுவினர் விரைவில் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திடீரென கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு கிளம்பி உள்ளதாக தெரிகிறது. ’இந்தியன் 2’ படத்தின் முக்கிய காட்சி ஒன்றின் படப்பிடிப்பு அமெரிக்காவில் படமாக்கப்பட இருப்பதை அடுத்து அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் ரஷ்யாவுக்கு ’தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்போடு தேர்தல் பணிகளையும் அவர் கவனிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கடவுள் எனக்கு அனுப்பி வைத்த முதல் குட்டி நண்பன்': பிறந்த நாள் வாழ்த்து கூறிய அட்லி..!

 பிரபல இயக்குனர் அட்லி தனது மகனின் முதலாவது பிறந்தநாள் குறித்த பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, 'கடவுள் எனக்கு அனுப்பிய முதல் குட்டி நண்பன்' என்று நெகிழ்ச்சியுடன்

கதையுடன் வந்தால் முழு படத்துடன் போகலாம்..  அஜித் பட தயாரிப்பாளரின் பிரமாண்டமான திட்டம்..!

 அஜித் பட தயாரிப்பாளர் பிரமாண்டமான திரைப்பட நகரத்தை உருவாக்க இருப்பதாகவும் இந்த திரைப்பட நகருக்குள் கதையுடன் வந்தால் திரும்பிப் போகும் போது முழு படத்துடன் செல்லலாம் என்று

மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.. தர்ஷாவின் கிராமத்து கெட்டப் போட்டோஷூட்..!

நடிகை தர்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை' என்ற கேப்ஷனுடன் கிராமத்து  காஸ்டியூமில் உள்ள போட்டோஷூட் புகைப்படங்களை

சிம்புவின் பிறந்த நாள் பரிசாக வரும் செம்ம அறிவிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட தகவல்..!

சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'சிம்பு 48'. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள்

'தி டெஸ்ட்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்ட நயன்தாரா.. வைரல் வீடியோ..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'தி டெஸ்ட்'படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.