'நா ரெடி' பாடலுக்கு முன்பு ஒரு ஸ்பெஷல் ரிலீஸ்.. 'லியோ' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தில் இடம்பெறும் ’நா ரெடி’ என்ற பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலின் புரமோ வீடியோ நேற்று வெளியாகி இணையதளங்களில் ஸ்தம்பித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நாளை ’நா ரெடி’ பாடல் வெளியாகும் முன்னரே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் ஒன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு இந்த போஸ்டர் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதன் பின்னர் ‘நா ரெடி’ பாடல் வெளியாகும் என்று கூறப்படுவதால் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.