close
Choose your channels

அரசியலுக்கு வரும் முன்பு ராகுல் காந்தி பாணியில் ஒரு பயணம்..? விஜய்யின் மாஸ் திட்டம்..!

Wednesday, July 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவரது விஜய் மக்கள் இயக்கம் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தை முடித்துவிட்டு அவர் சினிமாவில் இருந்து விலகுவார் அல்லது ஷங்கரின் இயக்கத்தில் உருவாக உள்ள அரசியல் படத்துடன் அவர் தனது திரையுலக வாழ்வை முடித்துக் கொள்வார் என்றும் அதன் பிறகு முழுக்க முழுக்க அவர் அரசியலில் களமிறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அவ்வப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து விஜய் ஆலோசனை செய்து வருவதாகவும் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட அரசியலில் களம் இறங்குவது குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’லியோ’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே விஜய், தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் ராகுல் காந்தியின் அரசியல் பாதயாத்திரை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய்யின் பாதயாத்திரை தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் தமிழகம் முழுவதும் பாதை யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment