'கோட்' படத்திற்கு முன்பே வெளியாகும் விஜயகாந்த் படம்.. இயக்குனர் சொன்ன சஸ்பென்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் ஓரிரு காட்சிகளில் கேப்டன் விஜயகாந்த் தோன்றுகிறார் என்றும் ஏஐ டெக்னாலஜி மூலம் அவரது காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் உயிருடன் இருந்த போதே அவரை சில காட்சிகளில் நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் விஜயகாந்த் உடல்நிலை ஒத்துழைக்காததால் அவரது சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கவில்லை என்றும் இதனை அடுத்து ஏஐ மூலம் விஜயகாந்தை அந்த படத்தில் தோன்ற வைக்கலாம் என்று கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் விஜய் மில்டன் கூறிய போது ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் மறைந்த விஜயகாந்த் இருக்கிறார், ஆனால் அவர் எப்படி இருப்பார், எப்படி வருவார் என்பதை இப்போது சொல்ல முடியாது’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தில் விஜயகாந்த் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ’மழை பிடிக்காத மனிதன்’’ ஜூலை மாதமே வெளியாக உள்ளதால் ‘கோட்’ படத்திற்கு முன்பே விஜயகாந்தை திரையில் அவரது ரசிகர்கள் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
The magnetising screen presence of @vijayantony, and the brilliant visuals are the talk of town ☔💥#MazhaiPidikkathaManithan Trailer Hits 1M+ Views #MPMTrailer Streaming Now
— HighGrow Entertainment (@HighGrowEnt) June 30, 2024
🔗https://t.co/nlOw7bQeO9
🎬 @vijaymilton pic.twitter.com/XayCz2ELsc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com