ஜெயலலிதா மரணத்திற்கு முந்திய நாள் நடந்தது என்ன? மனோபாலா திடுக்கிடும் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அவர் இறந்த தேதி எது? என்பது குறித்து சர்ச்சைக்குரிய சந்தேகங்களை அவ்வப்போது பலர் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5ஆம் தேதிக்கு முந்திய நாளான டிசம்பர் 4ஆம் தேதியே தன்னிடம் படப்பிடிப்பை கேன்சல் செய்யுமாறு அதிமுக அமைச்சர் ஒருவரின் மைத்துனர் தன்னிடம் கூறியதாக பிரபல நடிகர், இயக்குனர் மனோபாலா தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனோபாலா அந்த பேட்டியில் மேலும் கூறியதாவது: `நான் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா அம்மாவைப் பார்க்க மருத்துவமனை சென்றேன். அங்கு சிறு பரபரப்பு காணப்படது. லிப்டில் ஏறி மேல் தளத்திற்கு சென்று பார்த்தால் அத்தனை எம்.எல்.ஏக்களும் இருந்தனர். ஒரே மௌன களமாக இருந்தது. ஒரு அமைச்சரின் மைத்துனர் வேகமாக என்னிடம் வந்து அண்ணா ஷூட்டிங் இருந்தால் உடனே கேன்சல் பண்ணிட்டு வீட்டுக்கு போங்க என்று கூறினார். ஏதோ நடக்கப்போகிறது என நினைத்து நானும் உடனே ஷூட்டிங்கை கேன்சல் செய்தேன். மறுநாள் வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. நான் ஏன் கேன்சல் செய்தேன் என இதுவரைக்கும் புரியவில்லை` என்று கூறினார்
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில் மனோபாலாவின் இந்த பேட்டி அதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments