அஜித் படத்திற்கு முன்பே விக்னேஷ் சிவன் இயக்கும் படம்: பரபரப்பு தகவல்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் அஜீத் படத்திற்கு முன்பே அவர் இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த செஸ் போட்டிக்கு உலகின் பல நாடுகளில் இருந்து செஸ் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆரம்ப விழா நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த ஆரம்ப விழாவை விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாகவும், இந்த ஆரம்ப விழா நிகழ்ச்சிக்கு இசையமைக்க இரண்டு பிரபல இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் புதுமண தம்பதிகள் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர் என்பது தெரிந்ததே. ஹனிமூன் முடித்துவிட்டு நயன் - விக்கி தம்பதியினர் நாடு திரும்பிய நிலையில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா மும்பை சென்றுள்ளார்.