எச் வினோத் படத்திற்கு முன் கமல் நடிக்கும் படம்.. ரூ.150 கோடி சம்பளமா?
- IndiaGlitz, [Thursday,June 15 2023]
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன் அவர் ’புராஜெக்ட் கே’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான ’புராஜெக்ட் கே’ திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஒரு மாத கால்ஷீட்டுக்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த படத்தில் தன்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பில் அவர் ஆகஸ்ட் மாதம் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ’புராஜெக்ட் கே’ படப்பிடிப்பில் தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் எச் வினோத் படத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ’ஆளவந்தான்’ ’தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் வில்லத்தனமான வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தாலும் முதல் முதலாக வேறொரு ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.