திரையரங்குகளில் மதுபானங்கள்: பிரபல இயக்குனரின் ஐடியா
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிந்தாலும், மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு நீட்டித்தாலும், நீட்டிக்காவிட்டாலும், திரையரங்குகள் திறக்க இன்னும் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ஆகலாம் என்றும், அதிகபட்சம் ஆறு மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பல திரைப்படங்கள் ஓடிடி பக்கம் சென்று கொண்டிருக்கின்றன. திரையரங்குகள் திறந்தாலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க ஏகப்பட்ட நிபந்தனைகள் இருக்கும் என்பதால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் முன்புபோல் வருவார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தனது சமூக வலைத்தளத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அதிக கூட்டம் வருவதற்கு திரையரங்குகளில் அனுமதி பெற்று பீர் உள்பட மதுபானங்களை விற்கலாம் என்று ஐடியா கூறியுள்ளார். ஆனால் திரையரங்குகளில் மதுபானங்கள் விற்பனை செய்தால் குடும்ப ஆடியன்ஸ் வர தயங்குவார்கள் என்று நெட்டிசன்கள் கூற, அதற்கு இயக்குனர் நாக் அஸ்வின், அனைத்து தியேட்டர்களிலும் தேவையில்லை, ஒருசில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் இப்போதைக்கு மது விற்பனை செய்யலாம். வெளிநாடுகளில் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
மதுவுக்கு எதிராக பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் திரையரங்குகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று ஐடியா கூறிய நாக் அஸ்வினுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இருப்பினும் ஒருசிலர் இந்த ஐடியாவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
Once In a talk with suresh babu garu and rana, it came up what if theaters get license to serve beer/breezer/wine, like in other countries..could it increase footfalls...could it save the theater business (which does need saving)...wat do you think? Good idea, bad idea?
— Nag Ashwin (@nagashwin7) May 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout