சிம்புவை கைது செய்ய எந்த தடையும் இல்லை. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,December 22 2015]

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டதால் சிம்பு தரப்பில் இருந்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நீதிபதி ராஜேந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.


சிம்புவுக்கு முன்ஜாமீன் கொடுக்க தமிழக அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தேவைப்பட்டால் நீதிபதி அந்த பாடலை கேட்ட பின்னர் தனது தீர்ப்பை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த பாடலை தான் கேட்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் வார்த்தைகளை எச்சரிக்கையுடனும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைத்து பிற்பகலுக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'இந்த வழக்கை வரும் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்த நீதிபதி, சிம்பு விசாரணைக்காக நேரில் ஆஜராக போலீசார் குறிப்பிட்டிருந்த டிசம்பர் 30 ஆம் தேதியை, ஜனவரி 4 வரை நீட்டிக்கலாம் என்றும் அதே நேரத்தில் விசாரணைக்காக சிம்புவை கைது செய்ய போலீசாருக்கு எந்த தடையும் இல்லை என்றும் உத்தவிட்டார். இதனால் சிம்பு எந்த நேரமும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

More News

மலேசிய ரசிகர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி தரும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது...

விஜய் கதாநாயகன் ஆனது எப்படி? எஸ்.ஏ.சி

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் நையப்புடை' படத்தின் அறிமுகவிழா இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது...

மீண்டும் மோதுகிறதா விஜய்-சூர்யா படங்கள்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய்யின் 'தெறி'க்காக 40 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றிய அட்லி

விஜய் நடித்து வரும் 59வது படமான 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே...

ரஜினி பேசும் வசனங்களை 10 நாட்களுக்கு கேட்க முடியாது. எஸ்.எஸ்.ராஜமெளலி

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் 'பாகுபலி' என்ற பிரமாண்டமான திரைப்படத்தை எடுத்து இந்திய திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குனர்...