சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை குறித்து பீலா ராஜேஷ் கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
34 வயதே ஆன பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை. இந்த இளம் வயதிலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகி அது தற்கொலை வரை சென்றது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.
இந்த நிலையில் சுஷாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் பல மத்திய அமைச்சர்களும், கிட்டத்தட்ட அனைத்து கிரிக்கெட் வீரர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் சுஷாந்த் சிங் மறைவு குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திறமையான இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்றி செய்து வந்த சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் நேற்று வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
Deeply saddened to hear about the untimely demise of the young and talented actor Sushant Singh Rajput RIP ??
— Dr Beela Rajesh IAS (@DrBeelaIAS) June 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments