சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்: புதிய செயலாளர் யார்?

  • IndiaGlitz, [Friday,June 12 2020]

தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் மீண்டும் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதிலிருந்தே சுகாதாரத்துறை சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தது. சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் தினமும் கொரோனா வைரஸ் குறித்த நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார். இதனால் தமிழகம் முழுவதும் அவர் பிரபலமானார்.

இந்த நிலையில் திடீரென தற்போது பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சுகாதாரத் துறைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் சுகாதார செயலாளராக இருந்தவர் என்பதும், தற்போது கொரோனா சிறப்பு அதிகாரியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக சுகாதாரத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

பிகினி போஸ் கொடுத்து தத்துவ மழை பொழிந்த தமிழ் நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை சஞ்சனா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே. 

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து: தமிழக டாக்டர் சாதனை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் லட்சக்கணக்கில் செலவு செய்து வருவதும், அவ்வாறு செலவு செய்தாலும்

டிக்டாக் வீடியோவுக்காக மீனை விழுங்கிய வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்

டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து அதிக லைக்ஸ்களை பெறுவதற்காக பலர் ரிஸ்க் எடுத்து வருவதால் பெரும் விபரீதங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

கொரோனா வைரஸ் பயம்: ஊரை மாற்றிய ஸ்ருதிஹாசன்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன்

கொரோனா பரிசோதனை செய்தாலே தனிமை: அரசின் அதிரடி அறிவிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட தமிழகத்தில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்