தமிழகத்தில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவைக்கு புதிய டிவிட்டர் கணக்கு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாதபோதோ அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும்போதோ அதுகுறித்த தகவல்களை @104GOTN எனும் டிவிட்டரில் பதிவிட்டு உடனடியாக தங்களுக்குத் தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் மருந்துகள் அனைத்தும் உறுதிச்செய்யப்படும் என்றும் தமிழகச் சுகாதாரச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகமும் சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளின் தேவையை உடனடியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு யு.சி.சி (ஒருங்கிணைந்த தலைமை மையம்) எனும் புதிய மையம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தின் வழியாக கொரோனா நோயாளிகள் தங்களது தேவைகளை எளிதாகத் தெரிவித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே மோசமான கொரோனா நோயாளிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைகளுக்குத் தமிழகம் முழுவதும் 104 சுகாதார உதவி எண் செயல்படுகிறது. இந்த சேவையுடன் இணைந்து யு.சி.சி மையம் செயல்படும். அதோடு சி.எம்.சி.எச்.ஐ.எஸ் போன்ற தற்போதைய சி.வி.ஐ.டி தொடர்பான சேவைகளுடனும் யு.சி.சி. இணைந்து செயல்படும்.
அதோடு படுக்கைகள் காலியிடம் குறித்த தகவல்களை யு.சி.சி மூலம் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும் கொரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் ஐ.சி.யூ வசதியை இந்த மையம் ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் இந்த யு.சி.சி தனியார் மருத்துவமனைகளையும் காண்காணித்து அங்கு தேவைப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்யும்.
இதனால் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை, ஆக்சிஜன் போன்ற தகவல்களுக்கும் தேவைப்படும் உதவிகளுக்கும் தமிழக மக்கள் @104GOTN எனும் டிவிட்டர் கணக்கு மூலம் பதிவிடலாம். அதோடு தனிநபர்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் இந்த டிவிட்டர் கணக்கு உதவியாக இருக்கும். இந்த டிவிட்டர் கணக்கில் கூறப்படும் விவரங்களை வைத்து கொரோனா நோய்க்கான சிகிச்சை, படுக்கை வசதி, ஆக்சிஜன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
If you need a #Covid bed in Tamil Nadu please tag Tamil Nadu Govt Health Dept. @104_GoTN and use the hashtag #BedsforTN . Please RT to reach as many as possible. #TamilNadu #Covid19 pic.twitter.com/PmnvoOwd3j
— TN (@104GoTN) April 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments