பொங்கல் ரிலீஸ்.. 'விடாமுயற்சி' விலகியதால் 7 படங்கள் ரிலீஸா?

  • IndiaGlitz, [Wednesday,January 01 2025]

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு திடீரென தவிர்க்க முடியாத காரணத்தினால் பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என லைகா நிறுவனம் அறிவித்தது. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், பொங்கல் ரிலீஸில் இருந்து ’விடாமுயற்சி’ விலகியதால் கிட்டத்தட்ட ஏழு திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ’கேம் சேஞ்சர் மற்றும் பாலா இயக்கிய ’வணங்கான்’ ஆகிய திரைப்படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ’மெட்ராஸ் காரன்’, ’காதலிக்க நேரமில்லை’, ’தருணம்’ மற்றும் ’டென் அவர்ஸ்’ ஆகிய படங்கள் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

இத்துடன் நீண்ட காலமாக ரிலீசுக்கு தயாராகி, ரிலீஸ் ஆகாமல் இருந்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ’சுமோ’ என்ற படமும் பொங்கல் ரிலீஸ் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, விக்ரமின் ’வீர தீர சூரன்’ உள்பட, மேலும் சில படங்கள் ரிலீசாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

புத்தாண்டை கொண்டாட குடும்பத்துடன் வெளிநாடு சென்ற அஜித்.. வைரல் வீடியோ..!

இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில், புத்தாண்டை கொண்டாட பல உலக பிரபலங்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். குறிப்பாக,

ஜாலியாக ஒரு போட்டிங்.. பிரபல நடிகருடன் புத்தாண்டை கொண்டாடும் நயன்தாரா..!

பிரபல நடிகர் மற்றும் அவருடைய மனைவியுடன் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டில் போட்டிங் செய்யும் புகைப்படத்தை

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆளுனரை சந்தித்தது ஏன்? தவெக தலைவர் விளக்கம்..!

தமிழக ஆளுநரை இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து தமிழக வெற்றி கழகம் விளக்கம் வெளியிட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆளுனர் ஆர்.என்.ரவியை திடீரென சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.