'தளபதி 64' படப்பிடிப்புக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்?

  • IndiaGlitz, [Monday,November 04 2019]

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் பத்தே நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்து தற்போது டெல்லியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு, பெரும் பிரச்சனையாக இருப்பதால் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பிற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

டெல்லியில் தற்போது நிலவி வரும் காற்றுமாசு காரணமாக படப்பிடிப்பு நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், டெல்லியில் காணப்படும் மூடுபனியால், குறைவான நேரம் மட்டும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரிகிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி! திருந்தாத அரசுகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்து நாட்களாக மீட்க முடியாமல்

உயிருடன் மீட்கப்பட்டும் பலியான ஹரியானா சிறுமி!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற பகுதியில் நேற்று மாலை 5 வயது சிறுமி ஒருவர் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறுதலாக கீழே

வசூல் மழையில் கைதி: விநியோகிஸ்தர்களுக்கு ஜாக்பாட்

கடந்த தீபாவளி விருந்தாக தளபதி விஜய்யின் பிகில் படம் வெளியான நிலையில் அந்த படத்துடன் வெளியான ஒரே தமிழ்படம் கார்த்தி நடித்த கைதி' என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்யின் பிகில் பத்தே நாளில் வசூல் செய்த மிகப்பெரிய தொகை

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த படம் 5 நாட்களில் ரூபாய் 100 கோடிக்கு மேல்

பிரதமர் மோடிக்கு தமிழ் இயக்குனரின் வேண்டுகோள் கடிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று முன் தினம் மத்திய அரசு கோல்டன் ஐகான் விருது அறிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினர் இந்த விருதில் உள்நோக்கம் இருப்பதாகவும்