பாவாடை தாவணியில் நடிகை ரோஜா: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Monday,October 18 2021]
கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகைகள் சிலர் திடீரென ஸ்லிம் ஆகி தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வருகின்றனர் என்பது குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
குறிப்பாக நடிகை குஷ்பு மற்றும் நடிகை சினேகா ஆகிய இருவரும் ரசிகர்களே எதிர்பாராத வகையில் ஸ்லிம்மாகி தங்களது சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் அந்த புகைப்படங்களை மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரோஜா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பாவாடை தாவணி காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன என்பதும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.