நியூ பேஷன் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொள்ளும் நடிகை தமன்னா!

  • IndiaGlitz, [Wednesday,October 13 2021]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை தமன்னா. “கேடி“ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் “கல்லூரி“ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதற்குப் பிறகு நடிகர் சூர்யா, கார்த்திக், தனுஷ், ஜெயம் ரவி எனப் பல முன்னணி நடிகர்களின் ஹிட் படங்களில் நடித்திருந்தார். அதேபோல “பாகுபலி“ படத்தில் நடிகை தமன்னாவின் நடிப்பு ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவைத் தவிர தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களிலும் முன்னணி நடிகையாகவே வலம்வருகிறார். தெலுங்கில் பல ஹிட் படங்களைக் கொடுத்த இவர் தொடர்ந்து “That is Mahalakshmi’’, ‘’Gurtundha Seetakalam’’, ‘eetakalam’’, ‘’F3’’ போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்தியில் ‘’Bole Chadiyan’’, ‘’Chor nikal ke Bhaaga’’ போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துவருகிறார். அதேபோல தமிழில் இயக்குநர் கருணாகரன் இயக்கத்தில் ஒரு படத்திலும், “காத்துக் கருப்பு“ எனும் ஹாரர் படத்திலும் இணைந்துள்ளார்.

சமீபத்தல் எழுத்தாளர் அவதாரத்தை எடுத்திருந்த நடிகை தமன்னா “பேக் டூ தி ரூட்ஸ்“ என்று பழைய உணவுமுறையைப் பற்றிய தனது புத்தகத்தை லைப் ஸ்டைல் பயிற்சியாளர் லூக் என்பவருடன் இணைந்து எழுதியிருந்தார். மேலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷுட் புகைப்படங்கள், உணவுமுறை, வொர்க் அவுட் குறித்த விஷயங்களை அடிக்கடி பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்துவரும் நடிகை தமன்னா தற்போது கறுப்பு வண்ணத்தில் பேஷன் டிசைன் உடையை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.