சாகசமான காதல் பயணம்… நடிகை ஸ்ரேயா வெளியிட்ட அட்டகாசமான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய காதல் கணவர் ஆண்ட்ரே கோஸ்சீவ் உடனான காதல் பயணத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்பாது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “சிவாஜி“, தளபதி விஜய்யுடன் “அழகிய தமிழ் மகன்“, நடிகர் விக்ரமுடன் “கந்தசாமி“, நடிகர் தனுஷ்ஷுடன் “திருவிளையாடல் ஆரம்பம்“ போன்ற ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018இல் டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் கவனம் செலுத்திவரும் இவர் “ஆர்ஆர்ஆர்“ திரைப்படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் –ஆண்ட்ரே ஜோடிக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருப்பதும் அந்தக் குழந்தையுடன் இவர்கள் தங்களது நேரத்தை செலவிட்டு வருவதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான்.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஸ்ரேயா சரண் தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ஒரு நீண்ட படத்தொகுப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2018இல் துவங்கிய இந்தப் பயணம் தற்போது குழந்தையுடன் அழகான பொழுதாக மாறியிருக்கிறது. மேலும் இது சாகசமான ஒரு பயணம் என்பதையும் அவர் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com