'பீஸ்ட்' டிரைலருக்கு ஒரு முன்னோட்டம்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ட்ரைலரை பார்க்க காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’பீஸ்ட்’ படத்தின் டிரைலர் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. 17 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் தளபதி விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகள் ஆகியவை உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
#BeastTrailer is all set to get unleashed ??
— Sun Pictures (@sunpictures) April 2, 2022
Weight-ah kaatirlama nanba?#BeastTrailerFromToday @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastModeON #Beast pic.twitter.com/kVB2mRUYAt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments