'பீஸ்ட்' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்’  படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் அந்த அப்டேட் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்த அப்டேட்டின்படி அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் ஆகிய மூவரும் அரபி குத்துப்பாடல் கம்போஸ் செய்யும் காமெடியான காட்சிகளும், இவர்கள் மூவரிடமும் விஜய் போனில் பேசி கலாய்க்கும் காட்சிகளும் உள்ளன. இந்த பாடல் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அப்டேட் விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை இணையதளங்களில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருவதை அடுத்து இதுகுறித்த ஹேஷ்டேக் இணையதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் 2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.