close
Choose your channels

'பீஸ்ட்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நகரத்திலா? 

Sunday, August 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது என்பது தெரிந்ததே. தற்போது நடைபெற்று வரும் 3ஆம் கட்ட படப்பிடிப்பில் மால் ஒன்றின் செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், தீவிரவாதிகள் மால் ஒன்றில் புகுந்து பொதுமக்களை பணயம் வைத்து உள்ள நிலையில் விஜய் அவர்களை காப்பாற்றுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என்று கூறப்படும் நிலையில் ’பீஸ்ட்’ படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ’பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருப்பதாகவும் இன்னும் ஒருசில தினங்களில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட படக்குழுவினர் அனைவரும் டெல்லி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் நெல்சன் அனைத்து படப்பிடிப்புகளையும் பக்காவாக பிளான் போட்டு நடத்தி வருவதால் இந்த ஆண்டுக்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும், படப்பிடிப்பின் இடையே போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் நடந்து வருவதால் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனிருத் இசையில் சன்பிக்சர்ஸ் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment