ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் 'பீஸ்ட்' லீட்? நெல்சன் வைத்திருக்கும் டுவிஸ்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை கூர்ந்து கவனித்த ரசிகர்கள், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் போஸ்டருக்கும், ’ஜெயிலர்’ போஸ்டருக்கும் உள்ள ஒற்றுமையை கண்டுபிடித்துள்ளனர்.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் அவர் வாயில் வைத்திருந்த அரிவாளும், ‘ஜெயிலர்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உள்ள அரிவாளும் ஒன்றே என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படங்களின் காட்சிகளையும் கேரக்டர்களையும் அடுத்தடுத்த படங்களில் இணைத்து கொண்டிருக்கும் நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் சில கேரக்டர்களை ‘ஜெயிலர்’ படத்தில் நெல்சன் இணைப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது பகுதி ஸ்கிரிப்டை கிட்டதட்ட நெல்சன் எழுதி முடித்து விட்டதாகவும் அனேகமாக ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிவராஜ்குமார், ஐஸ்வர்யாராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.