'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படம் போன்றதா 'பீஸ்ட்'?: நெல்சன் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ மற்றும் ’டாக்டர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் டார்க் காமெடி படங்கள் என்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் ’பீஸ்ட்’ படமும் அதே போன்ற ஒரு படமா என்ற கேள்விக்கு தனது பதிலை இயக்குனர் நெல்சன் தெரிவித்து உள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படம் டார்க் காமெடி படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படமும் டார்க் காமெடி படம் என்பதும் இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரே சாயலில் இருந்தாலும் கதையம்சம் மட்டுமே கொஞ்சம் வேறுபாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நெல்சன் இயக்கிவரும் தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படமும் இதே போன்ற ஒரு டார்க் காமெடி படமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள இயக்குனர் நெல்சன், ‘நிச்சயமாக அந்த இரண்டு படங்கள் போல் ’பீஸ்ட்’ இருக்காது. விஜய் அவர்கள் நடிக்கும் படம் என்பதால் அவருக்கும் புதிதாக இருக்க வேண்டும், எனக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட படம் ’பீஸ்ட்’ என்றும் ஒரு சப்ஜெக்ட்டை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கும் படம்தான் ’பீஸ்ட்’ என்றும் அவர் விளக்கியுள்ளார்.
தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com