'பீஸ்ட்' நாயகியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,July 30 2021]

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது ’ராதேஷ்யாம்’ ’சலார்’ மற்றும் ‘ஆதிபுருஷ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’ராதே ஷ்யாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே ஒரு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தில் ’ராதே ஷ்யாம்’ படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளது. இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபாஸ் ஜோடியாக ‘பீஸ்ட்’ நாயகி பூஜா ஹேக்டே நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மனோஜ் ஒளிப்பதிவாளராகவும் வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.