ஷங்கர்-ராம்சரண் படத்தில் இணைந்த 'பீஸ்ட்' பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் பணிபுரிந்து வரும் தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் ஷங்கர் - ராம்சரன் படத்தில் இணைந்து உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டராக ஜானி மாஸ்டர் இணைந்தார் என்பதும் அவரது நடன இயக்கத்தில் தான் தற்போது விஜய், பூஜா ஹெக்டே பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர்- ராம்சரண் தேஜா இணையும் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணிபுரிய ஜானி மாஸ்அர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ மற்றும் ’காதலன்’ படத்தில் ஜானி மாஸ்டர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பாக ’காதலன்’ படத்தில் இடம்பெற்ற ’முக்காபுலா’ என்ற பாடலுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஸ் மற்றும் காதலன் படங்களுக்கு பின்னர் மீண்டும் ஷங்கர் படத்தில் பணிபுரிவதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அது மட்டுமின்றி தனது விருப்பத்துக்குரிய ஹீரோ ராம் சரண் தேஜாவின் படத்தில் பணிபுரிவதை நம்பவே முடியவில்லை என்றும் இந்த வாய்ப்பை தனக்கு அளித்த படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
Being a stage performer to #Muqabula song to Backup dancer among 500+ people in #Boys, I've admired @shankarshanmugh Sir alot. Now, being the main choreographer to his film with my fvt. Hero, person #RamCharan Sir #RC15 feels unbelievable. Thank you for believing in me Sir ?? pic.twitter.com/W6uCWU8Kt8
— Jani Master (@AlwaysJani) July 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments