இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது: 'பீஸ்ட்' நினைவலைகளை பகிர்ந்த ஒளிப்பதிவாளர்!

  • IndiaGlitz, [Friday,April 15 2022]

இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது என தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தின் நினைவலைகளை ஒளிப்பதிவாளர் மனோஜ் தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் குறித்த நினைவுகளை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ச தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே நாளில் தான் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என்றும், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த விஜய்க்கு மிகவும் நன்றி என்றும் கூறியுள்ளார். அதேபோல் நெல்சன் திலீப்குமாருடன் உடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது என்றும் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஒரு வருடம் விஜய் அவர்களுடன் செய்த பயணத்தை எனது வாழ்க்கையில் மறக்க முடியாது என்றும் மனோஜ் பரமஹம்ச கூறியுள்ளார். மேலும் இந்த பதிவில் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கேக் வெட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளார்.