'பீஸ்ட்' அரபிக்குத்து நடன இயக்குனருக்கு கிடைத்த சூப்பர் புரமோஷன்: குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 23 2022]

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பதும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணிபுரிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜானி மாஸ்டருக்கு தற்போது சூப்பர் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும், குறிப்பாக அரபிக்குத்து என்ற பாடல் நடனத்திற்காகவே சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த பாடலுக்கு சிறப்பாக நடன இயக்குனராக பணிபுரிந்த ஜானி மாஸ்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடித்து வரும் ’ஆர்சி 15 ’ உள்பட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஜானி மாஸ்டர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடந்தது. இந்த படத்திற்கு ’Yatha Raja Thatha Raja’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நடன மாஸ்டரான பிரபுதேவா உள்பட பலர் திரையுலகில் ஹீரோ ஆகியுள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது ஜானி மாஸ்டரும் ஹீரோவாகியுள்ளார் என்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.