close
Choose your channels

'தளபதி 68' படத்தில் 3வது முறையாக இணையும் இரட்டையர்கள்.. பூஜை எப்போது?

Tuesday, September 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ படத்தின் ரிலீஸ் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் பூஜை வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ’பீஸ்ட்’ மற்றும் ’லியோ’ ஆகிய படங்களில் விஜய்யுடன் பணியாற்றிய இந்த இரட்டையர்கள் மூன்றாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்திலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் ஏற்கனவே ஆச்சரியத்தை அளித்துள்ளன என்பதை பார்த்தோம். குறிப்பாக இந்த படத்தில் நாயகிகளாக சினேகா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும், மேலும் முக்கிய கேரக்டர்களில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் மெயின் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment