close
Choose your channels

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா 'பீஸ்ட்' நடிகை?  இன்னும் யார் யாரெல்லாம் நடிக்குறாங்க?

Thursday, August 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘தளபதி 68’ படத்தின் செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்தோம்.

மேலும் இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்றும், பிரபுதேவா, மாதவன் உட்பட ஒரு சிலர் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் ஜெய் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தில் ’பீஸ்ட்’ நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’பீஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை அபர்ணா தாஸ். இவர் கவின் நடித்த ’டாடா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் ’தளபதி 68’ படத்திலும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இவர் ஜெய் ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், ஒரு வேடத்திற்கு ஜோதிகா, மற்றொரு வேடத்திற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment