விஜய் செய்த செயலால் துள்ளிக்குதித்த அபர்ணா தாஸ்: வைரல் வீடியோ

’பீஸ்ட்’ படப்பிடிப்பின்போது விஜய் செய்த செயலால் அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் துள்ளிகுதித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவும் இன்னொரு முக்கிய கேரக்டரில் அபர்ணா தாஸ் நடித்து இருந்தனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பின்போது அபர்ணா தாஸ் தனது பிறந்த நாளை விஜய் உள்பட படக்குழுவினர்களுடன் கொண்டாடிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் விஜய், பிறந்த நாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்ற, அதை பார்த்து சந்தோஷமடையும் அபர்ணா தாஸ் துள்ளிக்குதிக்கும் காட்சிகள் உள்ளன. இதனை அடுத்து அபர்ணா தாஸ், விஜய் மற்றும் நெல்சனுக்கு கேக் ஊட்ட, மற்றவர்களும் அபர்ணா தாஸ்க்கு கேக் ஊட்டும் காட்சிகள் க்யூட்டாக உள்ளது.

இந்த வீடியோ குறித்து அபர்ணா தாஸ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த நாள் எனக்கு மிகவும் ஸ்பெஷலான நாள் என்றும் இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார்.