close
Choose your channels

கவின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'பீஸ்ட்' நடிகை: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Thursday, April 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் கவின் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் ‘பீஸ்ட்’ நாயகி நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

’நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான கவின், அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை அடுத்து கடந்த ஆண்டு அவர் நடித்த ’லிப்ட்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கவின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’தாதா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

கணேஷ் பாபு என்பவர் இயக்கும் இந்த படத்தில் கவின் ஜோடியாக ‘பீஸ்ட்’ நடிகை அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கே.பாக்யராஜ், மோனிகா, ஹரிஷ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment