’தளபதி 66’ படத்தில் இணைந்த ‘பீஸ்ட்’ நடிகை: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Friday,May 27 2022]

தளபதி விஜய் நடித்து வரும் 66வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’தளபதி 66’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதை பார்த்தோம். விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ், சம்யுக்தா, ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’தளபதி 66’ படத்தில் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஹர்ஷிதா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெங்குயின்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அத்வைத் ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இந்த இருவர் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் ‘தளபதி 66’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

 

More News

சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்டுன்னு: அஜித் குடும்பத்துடன் தயாநிதி அழகிரி 

சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்டுன்னு என அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: ஆண் நண்பரிடம் விசாரணை

பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய ஆண் நண்பரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாயை அடுத்து பிரியங்கா மோகன் சென்ற அடுத்த நாடு: வைரல் வீடியோக்கள்

இயக்குனர் நெல்சன், நடிகர் கவின், நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்களுடன் சமீபத்தில் நடிகை பிரியங்கா மோகன் துபாய் சென்றார் என்பதும், அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

எனது மனைவியின் கள்ளத்தொடர்பு ஆசாமி எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்: பிரபல நடிகர்

எனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி எங்கள் வீட்டில்தான் இருக்கிறார் என்றும் பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிறந்த நாளை கொண்டாடிய லட்சுமி ராயின் க்யூட் புகைப்படங்கள்!

நடிகை லட்சுமிராய் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் கியூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் கு