'பீஸ்ட்' நாயகிக்கு திருமணம்.. மாப்பிள்ளை 'மஞ்சும்மெல் பாய்ஸ்' பிரபலமா?

  • IndiaGlitz, [Wednesday,April 03 2024]

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ படத்தில் நாயகிகளில் ஒருவரான நடித்த அபர்ணாதாஸ், மஞ்சும்மெல் பாய்ஸ் பிரபலத்தை திருமணம் செய்ய இருப்பதாகவும் இவர்களது திருமணம் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை அபர்ணாதாஸ் என்பதும் இவர் படத்தின் மூலம் பிரபலமானார் என்பதும் தெரிந்தது. இதை அடுத்து கவின் நடித்த ’டாடா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த நிலையில் அந்த படமும் சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அபர்ணா தாஸ், ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தில் சுதி என்ற கேரக்டரில் எடுத்த தீபக் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் இருவரும் சில ஆண்டுகள் காதலித்த நிலையில் தற்போது இரு தரப்பு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தீபக் மற்றும் அபர்ணாதாஸ் திருமணம் ஏப்ரல் 24ஆம் தேதி கேரளாவில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்திற்கு மலையாளத் திரை உலகின் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.