'பீஸ்ட்' ரிலீஸ் தேதியை உறுதி செய்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அந்த படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’’பீஸ்ட்’ திரைப்படம் கண்டிப்பாக ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வரும் என்றும் கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு இல்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் திரையரங்குகளில் ’பீஸ்ட்’ படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி என்று பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் 2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Beast will release on April 14th - Redin Kingsley ??
— Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) January 14, 2022
Mark The Date - April 14 2022 #Beast @actorvijaypic.twitter.com/Qz3N5P5IKW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments