ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'பீஸ்ட்' நடிகர்!

ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள 30வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து வருகின்றன.

பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும் ஜெயம் ரவியின் 30வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் இன்று இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் எம் ராஜேஷ் இயக்கிய இரண்டு படங்களில் ஏற்கனவே இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒருவர் தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் நடித்த விடிவி கணேஷ் என்பதும் இன்னொரு நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் கேரளாவில் தொடங்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


 

More News

கமல்ஹாசனுடன் ஜோடி சேர்கிறாரா பாலிவுட்-ஹாலிவுட் நடிகை?

உலக நாயகன் கமலஹாசனுடன் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

முதல் படம் வெளியாகும் முன்னரே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த நடிகை!

பிரபல இயக்குனர் ஒருவரின் மகள் நடிகையாக அறிமுகமான நிலையில் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழங்கால் அளவில் பாவாடை அணிந்து படவிழாவுக்கு வந்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட விழாவுக்கு பாவாடையுடன் வந்ததையடுத்து திரைப்பட விழா குழுவினர் உள்பட ரசிகர்கள் பலர் ஆச்சரியமடைந்தனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ

ஒரே நாளில் முடிவு செய்து அவசர அவசரமாக நடந்த கல்யாணம்: பிரபல சீரியல் நடிகை

தனது திருமணம் ஒரே நாளில் திட்டமிட்டு அவசர அவசரமாக நடந்ததாகவும், பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை என்றும் நண்பர்களை கூட அழைக்க முடியவில்லை

தனுஷ் வேற லெவல் நடிகர்: 41 வயது சீனியர் நடிகை பாராட்டு!

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் என்பது தெரிந்ததே.