வைரலாகும் 'பீஸ்ட்' நடிகரின் சர்ச்சைக்குரிய வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் திரைக்கதையை பலரும் கேலியும் கிண்டலும் செய்து வந்தார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெட் ஓட்டியதை , ஜெட் ஓட்டும் ராணுவ வீரர்களே சமூக வலைத்தளங்களில் கேலி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தை மற்றவர்கள் கேலி செய்தால் பரவாயில்லை, ஆனால் அந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவரே கேலி செய்து இருப்பதுதான் விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் தீவிரவாதிகளின் ஒருவராக நடித்திருந்த மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ என்பவர் சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியின்போது ‘பீஸ்ட்’ படம் குறித்து கேலியாக கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில் ‘பீஸ்ட்’ படம் உங்களுக்கு தமிழில் ஒரு நல்ல எண்ட்ரியா? என கேட்டதற்கு ‘பீஸ்ட்’ படமே தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல எண்ட்ரி கிடையாது என கிண்டல் அடித்தார். அதன்பிறகு அவர் ’விஜய் ஒரு காட்சியில் என்னை கட்டி தூக்கி செல்வார் என்றும், யாராவது ஒரு வெயிட்டை தூக்கி சென்றால் அவருடைய முகத்தில் கொஞ்சமாவது ரியாக்சன் இருக்கும் என்றும், ஆனால் விஜய்யின் முகத்தில் எந்தவிதமான ரியாக்ஷனும் இருக்காது என்றும், இதற்கு விஜய்யை குறை சொல்ல முடியாது என்றும், படக்குழுவினர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
அவருடைய இந்த பேட்டியின் வீடியோ இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் அவருக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஒரு படத்தின் கதையை கேட்டு, தான் நடிக்கும் காட்சியையும் கேட்டு உடன்பட்டு தான் அவர் நடித்தார். தற்போது அந்த படம் தோல்வி அடைந்த பிறகு படக்குழுவினரை கேலி செய்வது எந்த வகையில் நியாயம் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதல்லாம் எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா @Nelsondilpkumar pic.twitter.com/bavVZYr44P
— T H A N G A M (@ThangamAK23) June 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com