ஐபிஎல் போட்டி எதிரொலி: கடற்கரை சாலை- வாலாஜா சாலை போக்குவரத்து திடீர் நிறுத்தம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி இன்னும் ஒருசில மணி நேரங்களில் ஆரம்பமாகவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக சற்றுமுன் சேப்பாக்கம் மைதானம் கடற்கரை சாலையில் இருந்து வாலாஜா சாலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாலாஜா சாலையில் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் வெறும் காக்கி தலைகளாகவே காட்சி அளிக்கின்றது.
மேலும் வாலஜா சாலையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இணை ஆணையர் அன்பு தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும், போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சந்தேகப்படும் வகையில் உள்ள நபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் இருந்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா அவர்களை சற்றுமுன் சந்தித்துள்ளார். சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்புகள் குறித்த சந்திப்புதான் இது என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே 4000 காவல்துறையினர் மற்றும் 4 அடுக்கு பாதுகாப்பு என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்புக்கு பின்னர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout