ஐபிஎல் போட்டி எதிரொலி: கடற்கரை சாலை- வாலாஜா சாலை போக்குவரத்து திடீர் நிறுத்தம்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி இன்னும் ஒருசில மணி நேரங்களில் ஆரம்பமாகவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக சற்றுமுன் சேப்பாக்கம் மைதானம் கடற்கரை சாலையில் இருந்து வாலாஜா சாலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாலாஜா சாலையில் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் வெறும் காக்கி தலைகளாகவே காட்சி அளிக்கின்றது.

மேலும் வாலஜா சாலையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இணை ஆணையர் அன்பு தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும், போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சந்தேகப்படும் வகையில் உள்ள நபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் இருந்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  டெல்லியில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா அவர்களை சற்றுமுன் சந்தித்துள்ளார். சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்புகள் குறித்த சந்திப்புதான் இது என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே 4000 காவல்துறையினர் மற்றும் 4 அடுக்கு பாதுகாப்பு என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்புக்கு பின்னர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது.

More News

சென்னையில் சிஎஸ்கே போட்டி: கட்டுப்பாட்டிற்கு திடீர் தளர்வு

சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போட்டிக்கு வரும் பார்வையாளர்களுக்கு நேற்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

காவிரிக்காக ஒன்று சேர்ந்த அஜித்-விஜய் ரசிகர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகின்றனர்.

விஜய் எப்பொழுது அரசியலில் ஈடுபடுவார் ? எஸ்.ஏ.சி

தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் சமூக  வலைத்தளங்கள் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு தந்தையாக விஜய் அரசியலுக்கு வரவேண்டும்

'இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது: சிஎஸ்கே வீரரின் தமிழ் டுவீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துவிட்டாலே தன்னாலே தமிழ் உணர்வும், தமிழ் டுவீட்டும் வீரர்களிடையே வந்துவிடும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

200 தொகுதிகளில் நடிகர்கள் கட்சி வெற்றி பெறும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்தால், அந்த கட்சி உறுதியாக 200 தொகுதிகளை கைப்பற்றும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.