பொறியியல் படித்திருந்தாலும் ஓகே...அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை

பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அரசு பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் என தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் படித்தவர்கள் மட்டுமே பி.எட் படிக்கலாம் என்பதை மாற்றி 2015-2016 கல்வியாண்டில் பொறியியல் படித்தவர்களும் பி.எட் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதப்பட அனுமதிக்காததால் அவர்கள் அரசு ஆசிரியர் பணி பெறுவதில் சிக்கல் இருந்தது.

இப்போது பி.இ.பி.எட். படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் என சமநிலைக்கு குழு அரசாணை வெளியிட்டிருப்பதால் இவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள்.

பொறியியல் பட்டதாரிகள் பலர் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு ஏதுமில்லாமல் இருப்பதால் அரசு இந்த ஏற்பாட்டை செய்திருக்கும் என கருதப்படுகிறது.