மேட்ச் ஃபிக்சிங்கிற்கு சிக்னலா? சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டு சிக்கிய இந்திய வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டிகளின் இரண்டாவது கட்டப் போட்டிகள் அனைத்தும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் (செப்டம்பர் 21) ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிப்பெற்ற நிலையில் பஞ்சாப் அணி வீரர் தீபக் ஹுடா செய்த ஒரு காரியம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிசிசிஐ விதிகளின்படி ஒரு இந்திய வீரர் போட்டி நடைபெறுவதற்கு முன்பு மேட்ச் குறித்த எந்த தகவலையும் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அதிலும் குறிப்பாக பிளேயிங் 11 பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் மேட்ச் ஃபிக்சிங் செய்பவர்களுக்கு அதுவே வசதியாக முடிந்து விடும் எனக் கூறியிருக்கிறது.
இந்நிலையில் பஞ்சாப் வீரர் தீபக் ஹுடா கிரிக்கெட் களத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே ஹெல்மெட் அணிந்து கொள்வது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். இந்தப் புகைப்படம் ஒருவேளை மேட்ச் ஃபிக்சிங் செய்பவர்களுக்கான சிக்னலா என்று பிசிசிஐ தற்போது சந்தேகம் அடைந்துள்ளது. இதனால் தீபக் ஹுடாவிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பிசிசிஐயின் முன்னாள் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித் சிங் கூறும்போது “கிரிக்கெட் வீரர்களின் சமூக வலைதள உலையாடல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது“ என்றும் எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது ஐபிஎல் வீரர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout