பொய் சொன்னது யார்? விளக்கம்கேட்டு கோலிக்கு நோட்டிஸ் அனுப்ப நினைக்கும் கங்குலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன்சி விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும் பிசிசிஐயின் தலைவர் கங்குலிக்கும் இடையே கடும் பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் யார் சொன்னது பொய் என்பது குறித்து விளக்கம் கேட்டு விராட் கோலிக்கு கங்குலி நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் 3 வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்துவந்த கோலி ஐசிசியின் ஒரு கோப்பையைக்கூட வெல்லவில்லை, பேட்டிங்கிலும் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் என விமர்சிக்கப்பட்டதை அடுத்து டி20 உலகக்கோப்பை போட்டியின்போது டி20 இந்தியக் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து டி20, ஒருநாள் போட்டி என 2 வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் இருக்க வேண்டும், அதுதான் நல்லது என முடிவெடுத்த பிசிசிஐ டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மாவையே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமித்தது. இந்த நியமனத்தின்போது பிசிசிஐ கோலிக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் அவரிடம் கலந்து ஆலோசிக்காமலேயே திடீரென பதவியைவிட்டு நீக்கிவிட்டதாகவும் சர்ச்சை கிளம்பியது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐயின் தலைவர் கங்குலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகும்போதே அவரை விலகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேம். ஆனால் அவர் பதவிவிலகிவிட்டார். டி20, ஒருநாள் என இரண்டு போட்டி வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் இருப்பதுதான் நியாயம். எனவே ஒருநாள் போட்டியின் கேப்டனை நீக்க வேண்டியிருந்தது என விளக்கம் அளித்திருந்தார்.
கங்குலியின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விராட் கோலி, டி20 கேப்டன் பதவியைவிட்டு நான் விலகும்போது யாரும் என்னை விலக வேண்டாம் எனக் கூறவில்லை, அதேபோல ஒருநாள் கேப்டன்சியை விட்டு என்னை நீக்கியபோதும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அணியினை அறிவிப்பதற்கு வெறுமனே 90 நிமிடங்களுக்கு முன்புதான் என்னிடம் தெரிவித்தார்கள் எனக் கூறியிருந்தார்.
இதனால் ஒருநாள் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து விராட் கோலியை அதிரடியாக நீக்கினார்களா? என பிசிசிஐ மீது ரசிகர்களும் கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்தனர். இது ஊடகங்களில் கடும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிசிசிஐயின் தலைவர் சேத்தன் ஷர்மா டி20 கேப்டன்சியை விட்டு விலகும்போது கோலியிடம் பதவிவிலகவேண்டாம் என்று கூறினோம் என அதிரடியாகப் பேசியிருந்தார். இதனால் கோலிதான் பொதுவெளியில் பொய் சொல்லுகிறாரோ? எனப் பரபரப்பு கிளம்பியது.
இந்தப் பரபரப்பு சற்று தணிந்துள்ள நிலையில் தற்போது நான் பொய் சென்னேனா? என விளக்கம்கேட்டு கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப கங்குலி முடிவு செய்துள்ளார். ஆனால் இப்படி நோட்டீஸ் அனுப்பினால் பிசிசிஐயில் சிக்கல் ஏற்படும் என்று கருதிய பிசிசிஐயின் செயல்தலைவர் ஜெய் ஷா, கங்குலியை சமாதானப்படுத்தினாராம். இதனால் தன்னுடைய நோட்டீஸ் முடிவை கங்குலி தற்போதைக்கு தள்ளிப்போட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout