நியூசிலாந்தை கவிழ்க்க திட்டம் போடும் பிசிசிஐ… ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சவுதாம்ப்டனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது. இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் அதன் கேப்டன் வில்லியம்ஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் 2 டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாடுவதற்கு பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த பயணத்தில் இந்திய அணியோடு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நியூசிலாந்து அணி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றது. தற்போது நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது. இப்படி நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் இந்திய ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணி வீரர்கள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் இந்தப் பயணத்தில் டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் போட்டி வரும் அக்டோபரில் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற்ற உள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 3 வது வாரம் முதல் அக்டோபர் வரை ஐபிஎல் தொடர் போட்டிகள் நடக்கவுள்ளது. இதற்குப் பின்பு டி20 உலககோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் முடிந்த பிறகு நியூசிலாந்து அணியோடு இந்திய அணி விளையாடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout