2022 ஐபிஎல் எங்கே நடக்கும்? அமீரகத்தை ஓரம்கட்டி பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பிசிசிஐயின் அடுத்த தேர்வு ஐக்கிய அமீரகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ ஒரு புதிய இடத்தைத் தேர்வு செய்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் ஐக்கிய அமீரகத்தில் தொடர்ந்து போட்டிகளை நடத்துவதால் அதிகச் செலவு ஆகிறது என பிசிசிஐ என ஏற்கனவே வருத்தம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாடுகள் குறித்து பிசிசிஐ நேர்மறையான ஆர்வத்தைக் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது 3 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிக்கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் விளையாடி வருகிறது.
முன்னதாக ஒமைக்ரான் அச்சுறுத்தலால் காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை ரத்து செய்துவிடலாம் என பிசிசிஐ கூறிவந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூடுதல் பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்துதருவதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனால் இந்திய வீரர்கள் காட்டுக்குள் ஒரு பாதுகாப்பான ஹோட்டலில் தங்கி தற்போது போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
மேலும் ஆள் அரவமற்ற அங்குள்ள காடுகள், குளம் குட்டைகள் என்று இந்திய வீரர்களுக்கு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் புது உற்சாகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதனால் தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் 2022 போட்டிகளை நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் பாதுகாப்பான சூழல் மற்றும் குறைந்த செலவில் தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியும் என்று பிசிசிஐ நம்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் கொரோனாவால் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்து இருக்கும் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயின் இந்தக் கோரிக்கையை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து வரும் பிப்ரவரி 12,13 ஆம் தேதிகளில் 2020 ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடத்தப்பட்டு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments