பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் 'தல'
Send us your feedback to audioarticles@vaarta.com
'தல' என்று அன்புடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு பத்மவிருது அளிக்க வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
பிசிசிஐ தலைவர் பி.கே.கண்ணா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மபுஷன் விருதுக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து தோனி மட்டுமே இந்த ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக இந்த விருதுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்' என்று கூறினார்.
302 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 9737 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்கள் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 78 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 1212 ரன்கள் அடித்துள்ளார். மேலும் தோனி தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையையும், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையையும் வென்றுள்ளது. மேலும் ஒரு விக்கெட் கீப்பராக தோனி இதுவரை 584 கேட்சுகளை பிடித்துள்ளார்.
இத்தகையை சாதனை வைத்துள்ள தோனி பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த விருது நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்கு பத்மபூஷன் விருது கிடைத்தால் இந்த விருதை பெறும் 11வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னர் சச்சின், கபில்தேவ், ராகுல் டிராவிட் உள்பட 10 கிரிக்கெட் வீரர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout