உலககோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி விளையாட தடையா?
- IndiaGlitz, [Thursday,February 21 2019]
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பிசிசிஐ, ஐசிசிக்கு கடிதம் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஐசிசி தலைவர் ஷசாங்மனோகருக்கு பிசிசிஐ இதுகுறித்து கடிதம் எழுத இருப்பதாகவும், ஐசிசி இந்தகடிதத்தை நிச்சயம் பரிசீலிக்கும் என்றும் கூறப்படுகிறது
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் சமீபத்தில் புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பகிரங்க ஆதரவு அளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதை அடுத்து உலகம் முழுவதும் பாகிஸ்தானுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன
இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடாது என்று கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை பெற்று கொடுத்த இம்ரான்கான் அந்நாட்டின் பிரதமராக இருந்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கப்பட்டால் அது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது