ஒருநாள் போட்டிக்கு இவர்தான் கேப்டன்… வெளியான பரபரப்பு தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விராட் கோலிக்கு பதிலாக ஒருநாள் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ ஆர்வம் காட்டிவருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரின்போது இது நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு இந்தியக் கிரிக்கெட்டின் 3 வடிவங்களுக்கும் விராட் கோலியே கேப்டனாக பதவி வகித்துவந்தார். ஆனால் விராட் கோலி தனது கேப்டன்ஷியில் பல்வேறு சாதனைகளை செய்திருந்தாலும் சாம்பியன்ஷிப் மற்றும் பிசிசிஐயின் ஒரு கோப்பையைக்கூட அவர் வென்றுதரவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து டி20 உலகக்கோப்பை தொடரின்போது, டி20 இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷி பதவியில் இருந்து விலகிவிடுவதாக விராட்கோலி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது டி20 கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் பதவி வகித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் பதவியையும் இழக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 2023 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இப்போதே வலிமையான அணியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிசிசிஐ ஒருநாள் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என தீர்மானித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதை நடைமுறைப் படுத்தும் வகையில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் ஒருநாள் அணியின் கேப்டன் மற்றும் டி20 அணியின் கேப்டன் என இருபதவிகளையும் ரோஹித் சர்மா வகிப்பார் என்ற தகவல் தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறப்பட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout