ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை அளித்த பிசிசிஐ!
Send us your feedback to audioarticles@vaarta.com
2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்று உள்ள நிலையில் நேற்று நடைபெற வேண்டிய 30வது போட்டி திடீரென ஒத்திவைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. நேற்றைய போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடைபெற இருந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி உள்பட மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியும் நடைபெறாது என்றும் தகவல் வெளிவந்தது. அதுமட்டுமின்றி இன்று நடைபெறும் ஐதராபாத்-மும்பை போட்டியும் நடப்பது சந்தேகமே என்று கூறப்பட்டது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஐபிஎல் போட்டிகள் ரத்து என பிசிசிஐ அறிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்டில் போட்டி முழுவதும் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது ஐபிஎல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments