மீண்டும் 2015 நிலைமையா? பிபிசி வானிலை அறிக்கையால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் 50செமீ மழை ஒரே நாளில் பெய்யும் என பிபிசி வானிலை அறிக்கை கூறியது. ஆனால் அந்த அறிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.
இந்த நிலையில் அடுத்த ஒருசில நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 2015ஆம் ஆண்டுபோலவே கன மழை கொட்டித் தீர்க்கும் என்றும் இதனால் வெள்ள அபாயம் இருப்பதாகவும், அதே பிபிசி வானிலைக்கான செய்திப் பிரிவு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
பிபிசி வானிலைப்பிரிவின் டுவிட்டரில் சனிக்கிழமை அதாவது நாளை தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 செமீ அளவுக்கு ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் நம்முடைய தமிழ்நாடு வெதர்மேன் தமிழக மக்கள் வெள்ளம் குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும், பிபிசி வானிலை அறிக்கையை பொருட்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஐந்து நாள் மழைக்கே சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பகுதி தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில் பிபிசி வானிலை அறிக்கையை கணக்கில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments