மாயா, விசித்ரா கேங் விவகாரம்.. பிக்பாஸ் வைத்த எதிர்பாராத டிவிஸ்ட்..!

  • IndiaGlitz, [Thursday,November 09 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்ட பின் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக மாயா கேப்டன் ஆக ஆனதிலிருந்து இரு அணிகள் பிக்பாஸ் வீட்டில் பிரிந்து காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக மாயா தனது கேப்டன்ஷிப்பில் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்று அதுமட்டும் இன்றி ஸ்மால் ஹவுஸ் வீட்டில் உள்ளவர்களை அவமரியாதையாக நடத்துகிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் அதிரடியாக பிபி கோர்ட் என்ற டாஸ்க்கை கொண்டு வந்துள்ளார். இதில் யார் மீது வழக்கு தொடுக்க போகிறோம், என்ன வழக்கு தொடுக்க போகிறோம் என்று போட்டியாளர்கள் சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

கேப்டன்ஷிப்பை தவறாக மாயா யூஸ் பண்ணுகிறார் என்று விசித்ரா வழக்கு தொடுக்கிறார். கேப்டனாக என்னுடைய பணியை செய்ய விட மாட்டார்கள் என்று மாயா விசித்ரா மீது வழக்கு தொடர்கிறார். இதுகுறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. மாயாவுக்கு ஆதரவாக பூர்ணிமா, சரவணன், ஆகியோர் வாதாடுகின்றனர் அதேபோல் விசித்ரா தரப்பிலும் வாதிடப்படுகிறது.

இந்த நிலையில் அர்ச்சனா மீது ஜோவிகா, மாயா மீதும் தினேஷ், விசித்ரா மீது பாலா ஆகியோர் வழக்கு தொடுக்கின்றனர். மொத்தத்தில் இன்றைய நீதிமன்ற டாஸ்க் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எபிசோடை பரபரப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

முடிகிறது 'கங்குவா' படப்பிடிப்பு.. சூர்யாவின் அடுத்த திட்டம்.

 சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி

உன் மேல எனக்கு ஃபீலே வரவில்லை.. நிக்சனுக்கு ஷாக் கொடுத்த ஐஷு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வரும் நிலையில் இந்த சீசனின் காதல் ஜோடி நிக்ஸன் மற்றும் ஐஷு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐஷுவிடம் நிக்சன்  எல்லை மீறும் பல காட்சிகளை

நிக்சனை தம்பி போல நினைத்தேன்.. வெளுத்து வாங்கிய வினுஷா..!

பெண்களுக்கு ஆபத்து என்று பிரதீப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிரதீப்பை விட ஆபத்தானவர்கள் உள்ளே இருக்கிறார்கள்

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி.. ரஜினி, சிவகார்த்திகேயன் படத்துடன் மோதலா?

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன்  இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி

தீபாவளி அன்று வெளியாகும் டீசர்? ரஜினி ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த டீசர் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று