close
Choose your channels

என் முன்னாடி கடவுள் வந்து நின்னா கூட என்னை நான் மாத்திக்க மாட்டேன்.. பிக்பாஸ் போட்டியாளர்..!

Thursday, October 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடவுள் வந்து என் முன்னால் நின்று, என்னை மாற்றிக்கொள்ள சொன்னால் கூட என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று பிக் பாஸ் போட்டியாளர் கூறிய புரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்கள் முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். ஒரு சில போட்டியாளர்கள் அமைதியாக மற்ற போட்டியாளர்களின் நடவடிக்கைகளை ஆழ்ந்து உற்று நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக பவா செல்லத்துரை அமைதியாக உள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் கதைகள் மற்றும் அறிவுரை சொல்லி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பிரதீப் அந்தோணி, பவா செல்லத்துரையிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ’நீங்கள் சொல்வதை அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் என்னை போலவே மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்கு தெரியாது. என்னுடைய ஆசை என்னவென்றால், நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் இருக்க வேண்டும். அதனால் உங்களை நீங்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

அதற்கு பவா செல்லத்துரை ‘என்னுடைய இயல்பை நான் எதற்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன், என் முன் கடவுள் வந்து நின்றாலும் கூட என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன், நான் இதுதான்’ என்று கூறினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment